விராலிமலை அருகே தேங்காய்தினிப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (60). இவர் நேற்று சைக்கிளில் கடைவீதி அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த கார் பிச்சை மீது மோதியது. இதில், பிச்சை படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.