உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: ஆட்சியர் ஆய்வு!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஏரல் வட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு செய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஏரல் வட்டத்தில் வெள்ளரிக்காயூரணி கண்மாயில் புதிதாக நிரந்தர மதகுகள் கட்டப்பட்டுள்ளதை ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தென்திருப்பேரை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுகாதார மையம் மற்றும் ஆய்வக கட்டிடத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், தென்திருப்பேரை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள உள்நோயாளி பிரிவினை பார்வையிட்டு அங்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். வெல்லமடம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் சார்பில் பயிற் பாதுகாப்பு மருந்துகளை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. ஏரல் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து துறை சார்நத அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி இரா.ஐஸ்வர்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.