கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எம். சின்னதுரை உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கொண்டனர்.