நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், புதிய நிழற்குடையை, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஷ்குமார் எம்பி., திறந்து வைத்தார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக இந்த பயணிகள் நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் அமைத்து தரப்படும்! -K.R.N.இராஜேஷ்குமார் MP

Update: 2024-08-29 06:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நிதியின்கீழ், ரூ.13.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் இராஜேஷ்குமார் எம்பி., மாவட்ட ஆட்சியர் ச. உமா ஆகியோர் புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.அப்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் வசதிக்காக இந்த பயணிகள் நிழல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் அமைத்து தரப்படும் என்றும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் ‌ மேலும் இந்த கூடத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் சுகாதாரமான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை பாதுகாப்புடன் சுற்றுப்புற சூழலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கே. சாந்தா அருள்மொழி, மாநகராட்சி மேயர் து. கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் சிவகுமார், ராணா ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News