அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரின் கைது
உருவ பொம்மை எரிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்ந்து கருத்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அண்ணாமலை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார் இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தரப்பில் கண்டனங்களும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அண்ணாமலை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர் இதன் ஒரு பகுதியாக தேனி அருகே உள்ள வீரபாண்டியில் தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அவரது புகைப்படத்தை காலணிகளால் அடித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்னர் வீரபாண்டி போலீசார் அண்ணாமலையின் உருவ பொம்மையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது