திருப்பூர்-தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு போலிஸ் பாதுகாப்புவேண்டி தமிழ்புலிகள்கட்சி சார்பில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு!

திருப்பூர்-தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலிஸ் பாதுகாப்புவேண்டி தமிழ்புலிகள்கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.;

Update: 2024-08-29 10:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கியை எங்கே போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என தமிழ் புலிகள் கட்சி சார்பில் திருப்பூர்  மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு. தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  மனு அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் சமூக நீதி சார்ந்து தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் போராடி களப்பணியாற்றி வருகிறார்  அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் புலிகள் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், மேலும் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News