சாதி பெயரை கூறி தரக்குறைவாக திட்டிய வக்கீல் கைது.
பரமத்தி வேலூரில் இரு வக்கீல்களுக்கு இடை ஏற்பட்ட மோததலில் சாதி பெயரை கூறி தரக்குறைவாக திட்டிய ஒரு வக்கீல் கைது.
பரமத்திவேலுார், ஆக 29– நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் இரு வக்கீல் இடையே ஏற்பட்ட மோதலில் சாதி பெயரை கூறி தரக்குறைவாக திட்டிய வழக்கில், வக்கீல் ஒருவரை வேலூர் போலீசார் தீண்டாமை வழக்கில் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், மானகிரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (47), இவர் மதுரையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜூன் 26- ம் தேதி ஏற்கனவே ஆஜரான வழக்கு சம்பந்தமாக அதற்குரிய வழக்கறிஞர் கட்டணம் பெறுவதற்காக பரமத்திவேலுார் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பரமத்திவேலூரை சேர்ந்த வக்கீல் பாலகுமாருக்கும் (50), வக்கீல் செல்வ குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வகுமாரை தாக்கமுயன்றதாகவும், சாதியை பெயரை கூறி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்வகுமாருக்கு சொந்தமான கார் டயர்களை வக்கீல் பாலகுமார் கிழித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா உத்தரவுப்படி வேலூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் எஸ்.ஐ.,மோகன், முருகேசன், செந்தில்குமார் உள்ளிட்ட தனிப்படையினர் கடந்த இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த வக்கீல் பாலகுமாரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.