விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வீடு தோறும் விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சி
இந்து முன்னணி மாநில தலைவர் துவக்கி வைத்தார்
வீரத்துறவி இராம கோபாலன்ஜி அவர்களின் கனவான வீடு தோறும் வினாயகர் என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக வினாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, அதன் முன்னேற்பாடாக வீடு தோறும் விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சி பல்லடத்தை அடுத்துள்ள கொடுவாய் அருகே கோவில் பாளையம் விநாயகர் கோவிலில் நடைபெற்றது. இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வீடு தோறும் விநாயகர் சிலை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கொடுவாய்,கோவில் பாளையம் மற்றும் கோவில் பாளையம்புதூர் பகுதிகளில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநாயர் சிலைகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்பு செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கிறிஸ்துமஸ்,ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதல்வர் இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.இந்த முறை தமிழக முதல்வருக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.ரம்ஜானுக்கு சென்று நோன்பு கஞ்சி குடிப்பது போல,கிறிஸ்மஸ்க்கு சென்று கேக் சாப்பிடுவது போல விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வந்து அனைவருக்கும் வாழ்த்து சொல்லி கொழுக்கட்டை சாப்பிட வேண்டும் என தெரிவித்தார்.