விருத்தாசலம் சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (60). இவருக்கு கடந்த சில வருடமாக உடல் நிலை சரியில்லாத சூழ்நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டு அவ்வப்போது மருந்து மாத்திரை வாங்கி வந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. மகளின் வீட்டிற்கும் போகவில்லை. இதையடுத்து உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மண்ணாங்கட்டியின் மகன் அரவிந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.