திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று இ-நாம் திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது ஏலத்தில் 29 விவசாயிகள் 80 மூட்டையில் 4000 கிலோ கொப்பரையை கொண்டு வந்திருந்தனர் ஏலத்தில் முதல் தரம் ரூ 99.89 முதல் ரூ 103.69 வரையும் இரண்டாம் தரம் ரூ 82.33 முதல் ரூ 97.99 வரையிலும் இ-நாம் திட்டத்தில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது