தென்காசி அருகே கிறிஸ்து பிறப்பு விழா நடந்தது
கிறிஸ்து பிறப்பு விழா நடந்தது;
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரத்தில் திருச்சிலுவை ஆலயம் மற்றும் லொயோலா எல்சியத்தில் கிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தை இயேசு பிறப்பு குறித்த குடில்கள் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. .அதில் 7 அடி உயரத்தில் 25 சிற்ப சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்மஸ் மரம் 21 அடி உயரத்திலும் மிக பிரமாண்டமாக சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இவ்விழா வேலாயுதபுரம் பங்கு தந்தை வ.எட்வின் ஆரோக்கிய நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிவகிரி பங்குதந்தை, துரைச்சாமியாபுரம் பங்குதந்தை, கார்மல் இல்ல அருட்தந்தையர்கள் கலந்து சிறப்பித்தார்கள் சிறப்பு திருப்பலியும், சிறப்பு திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. இவ்விழாவில் வேலாயுதபுரம், அருளாட்சி, தளவாய்புரம், கள்ளியூர், சரவணாபுரம், துரைச்சாமியாபுரம், மேலகரிசல்குளம் பகுதியை சேர்ந்த 1000த்திற்கும் அதிகமான இறைமக்கள் கலந்து கொண்டார்கள். இத்திருநிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசனம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை பாளையங்கோட்டை லொயோலா பப்ளிகேஷன் நிறுவனர் இ.பெர்க்மான்ஸ் செய்திருந்தார்கள்.