பெரும்பிடுகு முத்தரையர்அஞ்சல் தலை வெளியீடு....

தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றும் வகையில், அஞ்சல் தலை வெளியீடு;

Update: 2025-12-15 02:45 GMT
தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழின் சிறப்புகள் காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பெரும்பங்கு வகித்து, தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையை, மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் திரு CP ராதாகிருஷ்ணன் அவர்கள், வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளது. போர்கள் பல வென்று, பொற்கால ஆட்சி தந்த நிகரில்லா மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் அஞ்சல் தலை வெளியிடும் சிறப்பான நிகழ்வில், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் Dr L முருகன் அவர்கள், ராஜ்ய சபா துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் திரு KK செல்வகுமார் மற்றும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் R.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News