திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி பங்கேற்பு....
சங்ககிரி:திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி பங்கேற்பு.....
உலக வரலாற்றிலேயே தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திமுக என்று சேலம் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி பெருமிதம்... சேலம் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முதலாக இடங்கணசாலை நகர பகுதியில் நடைப்பெற்ற திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை புரிந்த போது சுமார் 5 அடி உயரத்தில் போர்படை தளபதி உருவம் கொண்ட வெண்கலச்சிலை நகர திமுக சார்பில் வழங்கி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது ... தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுப்படி சேலம் மேற்கு மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கணசாலை நகரம், மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி ஒன்றியம், அரசிராமணி, பேரூர் பகுதிகளைச்சேர்ந்த திமுக பொது உறுப்பினர்களுக்கான ஆலோசனைகள் கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைப்பெற்றது. சேலம் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முதலாக இடங்கணசாலை நகராட்சிக்கு வருகை புரிந்த டி.எம்.செல்வகணபதிக்கு இடங்கணசாலை நகர திமுக சார்பில் சுமார் 5 அடி உயரத்தில் போர்படை தளபதியின் திருவுருவ வெண்கல சிலை நகர செயலாளர் செல்வம் ஏற்பாட்டில் நினைவு பரிசாக வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டறிந்து திமுக அரசின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை எடுத்துக்கூறிய டி.எம்.செல்வகணபதி உலக வரலாற்றிலேயே தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒரே இயக்கம் திமுக என்றும், இளைஞர்களை அதிகளவில் திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் எனவும்,வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறுவதற்கான வழிவகைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா. இதில் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தணர். இக்கூட்டங்களில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், இடங்கணசாலை நகர செயலாளர் செல்வம், நகர்மன்ற தலைவர் கமலகண்ணன், ஒன்றிய செயலாளர்கள் மகுடஞ்சாவடி பச்சமுத்து, சங்ககிரி ராஜேஷ் உட்பட நகர, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.