கோயில் நிலங்களில் எல்லைகற்கள் நட குறியீடுகள் இடும் பணியினை திருப்பூர் தனி வட்டாட்சியர் ஆய்வு
கோயில் நிலங்களில் எல்லைகற்கள் நட குறியீடுகள் இடும் பணியினை திருப்பூர் தனி வட்டாட்சியர் ஆய்வு
கோயில் நிலங்களில் எல்லைகற்கள் நட குறியீடுகள் இடும் பணியினை திருப்பூர் தனி வட்டாட்சியர் ஆய்வு தாராபுரம் மற்றும் நகர் அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 30 குழு திருக்கோயில்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் 583.81 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கரையூர் கிராமம், அருள்மிகு நத்தமேடு விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஆலாம்பாளையம் கிராமத்தில் புல எண். 1167 மற்றும் 1168ல் 11.83 ஏக்கர் அளவீடு செய்யப்பட்ட பூமிக்கு எல்லைகற்கள் நட குறியீடுகள் இடும்பணியானது நடைபெற்றது. திருப்பூர் இணை ஆணையர் உத்தரவின்படியும், திருப்பூர் துணை ஆணையர் மேற்பார்வையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கோயில் நிலங்களில் எல்லைகற்கள் நட குறியீடுகள் இடும் பணியினை திருப்பூர் தனி வட்டாட்சியர் ரவீந்திரன் ஆய்வு செய்தார். அப்போது அருள்மிகு காடு அனுமந்தராயர் திருக்கோயில் செயல் அலுவலர் தி.மல்லிகா, ஓய்வுபெற்ற சர்வேயர் ராஜதுரை உடனிருந்தனர். மேலும் மேற்படி திருக்கோயில் பணியாளர்கள், உரிமம் பெற்ற நில அளவையர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.