திருப்பூர் சாலையில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை ஆகிய பணிகள் ஆய்வு

திருப்பூர் சாலையில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை ஆகிய பணிகள் ஆய்வு

Update: 2024-08-30 04:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் சாலையில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலை ஆகிய பணிகள் ஆய்வு தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டு திருப்பூர் சாலை பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மழை நீர் வடிகால், சிமெண்ட் சாலை ஆகிய பணிகளை நேரில் சென்று ஆய்வு நகர மன்ற தலைவர் பொறியாளர் கு. பாப்புகண்ணன் நேரில் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது புதிதாக அமைக்கப்படும் மழை நீர் வடிகால் மற்றும் சிமெண்ட் சாலைகள் ஆகிய பணிகளை விரைந்து முடிக்கவும், மழைநீர் வடிகால் தரம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் 4 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராசாத்தி பாண்டியன் , நகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ்,பொறியியல் பிரிவு பணியாளர்கள் அருள், நவநீதன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Similar News