மாடப்பள்ளி கிராமத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்!
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாடப்பள்ளி கிராமத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாடப்பள்ளி கிராமத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கல்விப் பயின்று வருகிறார்கள். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கல்வித் துறைக்கு என பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார் ஆனால் மாடப்பள்ளியில் தரம் மற்று இருக்கும் பள்ளி கட்டிடம் கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழும் அபாய சூழ்நிலையில் உள்ளது மேலும் மழைக்காலங்களில் பள்ளியின் தரைப்பகுதியில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது இதனால் பள்ளி குழந்தைகள் கீழே உட்கார முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் வகுப்பில் மூன்றாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளை அமர வைக்கும் பரிதாப சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எப்பொழுது வேண்டுமனாலும் இடிந்து விழும் அபாயகரமான சூழ்நிலையில் பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது மேலும் பள்ளி குழந்தைகளுக்கு கழிப்பிட வசதி செய்து திறக்கப்பட்ட இரண்டு மாதத்திலேயே சுவர்கள் பேர்ந்து விழும் நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனை பலமுறை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை என பெற்றோர்கள் வேதனைப்படுகின்றனர். பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர். இதனை உடனடியாக சரி செய்து கொடுக்குமாறு ஊர் பொதுமக்களும் கல்வி நிர்வாகமும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையை உடனடி சரி செய்து கொடுப்பார்களா எனவும் இதனை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சரி செய்ய உத்தரவிட வேண்டும் என அப்பகுதி ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.