விசாரணைக்கு வந்த கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
விசாரணைக்கு வந்த கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவன் ரம்மியன்.இவருக்கும் இவரது தந்தை கஜேந்திரனுக்கும் இடையே கடந்த மூன்று நாட்களாக மனக்கசப்பில் இருந்து வந்த நிலையில் நேற்றைய முன்தினம் மகன் வீட்டுக்கு வரக்கூடாது என்ற காரணத்திற்காக தன் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று விட்டார் வீட்டுக்கு வந்த ரம்மியன் வீடு பூட்டி இருப்பதை பார்த்து இவன் பூட்டி இருந்த வீட்டுக்கு மேல் பூட்டு போட்டு விட்டு வெளியே வந்து விட்டார் இவரது தந்தை கஜேந்திரன் மேல் போட்டு பூட்டிய தனது மகன் ரம்மியன் மீது நடவடிக்கை எடுக்க அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் தந்தை கஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.. அந்த புகாரின் பேரில் நேற்று மாலை அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து போன் செய்து ரம்மியனை விசாரணைக்கு காவல் நிலையம் வர சொல்லி இருந்தனர்.. அதன் காரணமாக நேற்று இரவு 7.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.. அப்பொழுது வெளியே இருந்து உள்ளே வந்த அச்சரப்பாக்கம் காவல் நிலைய சரவணன் உன்னுடைய பெயர் என்ன பிரச்சனை என்ன குடித்து இருக்கியா என கேட்டு அவரை கன்னத்தில் அடித்துள்ளார்.. ஏன் அடிக்கிறீர்கள் நான் என்ன செய்தேன் என மீண்டும் கேட்டபோது அவர் மேலும் இரண்டு அடியில் கன்னத்தில் அடித்துள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து நிற்க அவரை காவல் நிலையத்தில் உள்ளே தனியாக அமர வைத்தனர்..இதை அறிந்து வந்த அவரது சித்தப்பா காவ நிலையத்திற்கு சென்று பூட்டிருந்த பூட்டின் சாவியை கொடுத்துவிட்டு ரம்மியனை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்..அவருக்கு திடீரென காது வலி ஏற்பட்டதால் உடனடியாக அருகில் உள்ள மேல்மருவத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.அப்பொழுது அவருடைய காது திரை கிழிந்துள்ளதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் படியும் கூறி மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளனர். அவர் வீட்டுக்கு திரும்பி விட்டார்.. ஆனால் மீண்டும் அவருக்கு காது வலி அதிகமாக உடனடியாக மருத்துவமனைக்கு வந்து அங்கு C.T ஸ்கேன் மற்றும் பல்வேறு பரிசோதனை செய்து கொண்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.. இவரை தாக்கி காது திரையை கிழித்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் காவல்,துறை அதிகாரிக்கு கோரிக்கை வைத்தார்.