குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மதுராந்தகம் அருகே குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அபிராமிபுரம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் பாபு.. இவருக்கும் இவரது மனைவி சத்தியா இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம்.. அதேபோல் நேற்று இரவு தகராறு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் பாபு தன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார் சடலத்தை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.