மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு
மதுராந்தகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு. கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் காட்டுப் பகுதியில் மதகு கால்வாயில் சுமார் 30 வயது தக்க அழுகிய நிலையில் சடலம் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா மற்றும் சித்தாமூர் காவல் ஆய்வாளர் சடலத்தை மீட்டுமதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும் இறந்த நபர் சடலம் நான்கு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் ஏனென்றால் அழகி நிலையில் சடலம் இருந்ததால் காவல்துறையினர் சடலத்தை மீட்டு இது கொலையா அல்லது தற்கொலையா என பல கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் மதுராந்தகம் அருகே உள்ள சாத்தமை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் வயது 35 த/பெ காமராஜ் என தெரிய வந்துள்ளது.