திடுமல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் வட்டம் திடுமல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஆக.30: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் கபிலர்மலை அருகே உள்ள திடுமல் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்வாக கடந்த 28 ஆம் தேதி புதன்கிழமை காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாம் நாள் வியாழக்கிழமை கோபுரம் கலசம் வைத்தல்,மருந்து சாற்றுதல்,புண்யாகம்,விஷேச சாந்தி,பூர்ணகுதி,இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை 5 முதல் சுவாமி அழைத்தல்,சிறப்பு யாகம் நடைபெற்று 6.30 மணியளவில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோபுர கலசத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.