உடுமலை நகர பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
500க்கும் மேற்பட்ட உறுப்பினர் படிவங்கள் வழங்கபட்டது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகர பாஜக கட்சி சார்பில் தலைவர் அண்ணாமலை உத்தரவுகிணங்கவும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தல் படி உறுப்பினர் சேர்க்கை முகாம் நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது .நகர பொதுசெயலாளர்கள் தம்பிதுரை,சீனிவாசன் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை குறித்து உடுமலை நகர மண்டல பொறுப்பாளரும் மாவட்ட பொதுச் செயலாளரான வடுகநாதன் மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய அணி செயலாளரான மௌனகுருசாமி நகர பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கி கூறினார் . பின்னர் உடுமலை நகர பாஜக பூத்கமிட்டி தலைவர்கள் ,சார்பு அணி தலைவர்களுக்கு இன்று 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டன உறுப்பினர் சேர்க்கை உடுமலை நகர பொறுப்பாளர்கள் உமா குப்புசாமி, நாச்சியப்பன், குருசாமி, பாலசுப்பிரமணியம், மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் ராஜேந்திரன் ,மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி , சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ் ,இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலகுரு, நகர செயலாளர்கள் ஹரிகரன் ,முருகேசன், நகர துணைத்தலைவர் செல்வி ,நகர மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி , சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.