கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி
மேலவலம்பேட்டை கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம்பேட்டை கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு உறியடி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி வேற விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உறி அடித்தும், சறுக்கு மரம் ஏறியும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கேற்ற இளைஞர்களுக்கு பரிசு தொகைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.