இடுகாட்டில் போடப்பட்ட சாலையை அகற்ற கோரி மனு அளித்த பெண்கள்.
இடுகாட்டில் போடப்பட்ட சாலையை அகற்ற கோரி மனு அளித்த பெண்கள்.
ஆலங்குடி அருகே உள்ள கே.வி.கோட்டை ஊராட்சிக்குப்பட்ட பாத்திமா நகரில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பொதுமக்களுக்கு என்று தனியாக இடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக இந்த இடுகாட்டின் மையப்பகுதி வழியாக சாலை அமைத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஊர்முக்கியஸ்தர்களிடம் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சிலர் இடுகாட்டின் வழியாக தனிநபர் அமைக்கும் சாலையை தடுத்து நிறுத்தவும், இடுகாட்டில் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி ஆலங்குடி தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேசனில் மனு அளித்தனர்.