தாராபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பத்மா. துணைத் தலைவர் சந்திரலேகா, மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட ஒன்றிய பொருளாளர் மாரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது இதில் தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.9000 வழங்கிட வேண்டும் சத்துணவு திட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடத்தை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்வதை போல் ரூ.6,750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போல் ஒருவருட பிரசவ கால விடுப்பு, சத்துணவில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். சத்துணவு பணியில் உள்ள பட்டதாரி பெண்களுக்கு தகுதி அடிப்படையில் பணி உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50.க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.