திமுக நகர கழக அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
திமுக நகர கழக அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது
திமுக நகர கழக அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்திற்கு நகர அவை தலைவர் ப. கதிரவன் தலைமை வகித்தார். இதில் நகர கழக செயலாளர் சு.முருகானந்தம் ,தலைமை செயற்குழு உறுப்பினர் K.S.தனசேகர் சிறப்புரை ஆற்றினார். இதில் நகரக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இன்று 31.08.24 அன்று நடைபெற உள்ள கழகப் பொது உறுப்பினர்கள் கூட்டம் பற்றிய ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் செல்வராஜ், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, வார்டு உறுப்பினர் ஹைடெக் அன்பழகன், ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர ,இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் ,கிளைக் கழக செயலாளர்கள், நகர செயற்குழு உறுப்பினர்கள்,மாவட்ட அணிகளின், இந்நாள் முன்னாள் நிர்வாகிகள்,திரளாக கலந்து கொண்டனர் . இந்த செயற்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.