ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் நடத்தி வந்த உணவகம் அடித்து நொறுக்கி சூறையாடிய மர்ம கும்பல் தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

உணவகம்

Update: 2024-08-31 09:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பாண்டி. இவர் தேனி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து இறுதியில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி எட்டு மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு தேவதானப்பட்டி பகுதி திண்டுக்கல் நெடுஞ்சாலையின் ஓரத்தில் சொந்தமான நிலத்தில் உணவகம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வார காலமாக உணவகம் பூட்டி கிடந்தாக கூறப்படும் நிலையில் ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளரின் உணவகத்தை நேற்று இரவு மர்மகும்பல் முற்றிலுமாக அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். மேலும் உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்க்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி கையோடு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த பிரச்சனை குறித்து ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டி தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உணவகத்தை அடித்து நொறுக்கிய கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News