அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் சனி மகா பிரதோஷ விழா.
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் 29 -ஆவது தலமாகவும்,சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் உள்ளது அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில்.. இத்திருக்கோயிலில் சனி பிரதோஷத்தன்று நந்தியம் பெருமானுக்கும்,உற்சவரான சுவாமிக்கும் அம்மனுக்கும், பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், கலசாபிஷேகம் உள்ளிட்ட 15 வகையான சிறப்பு பொருட்களால் அபிஷேகமும் மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் தலைமை சிவாச்சாரியார் சங்கர் வேத மந்திரங்கள் முழங்க மேல தாளங்கள் ஒலிக்க சங்கொலி நாகம் எழுப்ப மகா தீபாரதனை நடைபெற்றது. அதன்பின்னர், நந்தி வாகனத்தில் சுவாமியும் அம்மனும் கோயிலின் உட்பிரகார வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் நந்தியம்பெருமானையும்,ஆட்சீஸ்வரரையும், இளங்கிளி அம்மனையும் வழிபட்டு சென்றனர்.விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.