தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து மாமியார் மற்றும் மருமகள் பலி இருவர் படுகாயம்.
தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து மாமியார் மற்றும் மருமகள் பலி இருவர் படுகாயம்.
தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதி விபத்து மாமியார் மற்றும் மருமகள் பலி இருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட இச்சிப்பட்டி அருகே குட்டையகாடு என்ற பகுதியில் கட்டுப்பட்ட இழந்த கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த காங்கயத்தைச் சேர்ந்த மதிவாணன் (28 ) அவருடைய மனைவி ராகவி என்கின்ற ராகவர்தினி (26) மற்றும் மதிவாணனின் தாயார் பாக்கியலட்சுமி (55 ) குழந்தை ஆதிக் ( 01) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் மனைவி ராகவி மற்றும் தாயார் பாக்கியலட்சுமி இருவர் உயிரிழந்தனர். மதிவாணன் மற்றும் குழந்தை ஆதிக் படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்கு கோவை உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். குழந்தை ஆதிக் காங்கேயத்தில் தனது முதல் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தாராபுரம் நோக்கி வரும்போது இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து ஊதியூர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.