உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் ஐந்தாம் நாள் விழா
திரளான பக்தர்கள் பங்கேற்பு;
உடுமலை பெரியகடை வீதியில் ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள்( நவநீத கிருஷ்ணன்)கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஸ்ரீஜெயந்தி உற்சவ விழா கடந்த 27-ம் தேதி தொடங்கியது.இந்த விழா வருகின்ற 5-ம் தேதி வரை 10 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.5-ம் நாளான நேற்று பாற்கடல் பள்ளி கொண்ட திருவரங்கன் தெப்போற்சவம் நடைபெற்றது.இந்த நிகழ்வுக்காக கோவில் மண்டபத்தில் தாமரை மலர்களுடன் கூடிய தெப்பம் உருவாக்கப்பட்டதுஇதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு பாடல்களை பாடி தெப்பக்குளத்தில் எழுந்தருளிய ரங்கநாத பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி,பிரம்மதேவர் ஆழ்வார்களை,சாமி தரிசனம் செய்தனர்.