சேவூர் அரசுப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றதில் மாணவிகளுக்கு மதிவண்டிகளை வழங்கினார் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன்;

Update: 2025-12-12 18:22 GMT
ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி திமுக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 114 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில்ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன் வரவேற்றார். மேலும் இதில் மாவட்ட துணைசெயலாளர் ஜெயராணிரவி, நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, மாவட்டபொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியசெயலாளர்கள் சுந்தர், துரைமாமது, மோகன், நகரபொறுப்பாளர் சைதை வ.மணிமாறன் முன்னாள் ஒன்றியக்குழுத்துணைத்தலைவர் கே.டி.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News