அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்

மங்கலம்பேட்டை காவல் நிலையத்தை யாதவ சமூகத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Update: 2024-09-01 09:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராதாகிருஷ்ணன் (வயது.55), அ.தி.மு.க., பிரமுகர். இவரும், அவரது உறவினரான கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் செல்வராசு என்பவரும் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் அங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று விட்டு, மங்கலம்பேட்டைக்கு திரும்பி வந்தபோது, கர்னத்தம் கிராமம் அருகே உள்ள ஒரு ரைஸ்மில் அருகில், எம்.அகரம் கிராமத்தை சேர்ந்த அரியமுத்து மகன் அசோக், பா.ஜ.க., பிரமுகர் தமிழ்செல்வன், திமுக பிரமுகர் திருஞானம் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, ராதாகிருஷ்ணனை ஆபாசமாகத் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், உடைந்த பீர் பாட்டிலால் கையில் குத்தியதில், பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டதையடுத்து, ராதாகிருஷ்ணன் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பின் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அசோக், தமிழ்செல்வன், திருஞானம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த நிலையில், வழக்குப் பதிவு செய்து பல நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதால் உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று மதியம் யாதவ மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கோகுல மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கதிர்வேல், ரமேஷ், செல்வராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட யாதவ சமுதாய அமைப்பினர் மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உதவி ஆய்வாளர் சண்முகம், சிறப்பு உதவி ஆய்வாளர் ஷேக் அப்துல்லா ஆகியோர் அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News