விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எடச்சித்தூர் புதுகுப்பம் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேசன் (46). இவர், நேற்று மாலை தனது வீட்டில் உள்ள தோட்டத்திற்கு செல்வதற்கு மின் விளக்கு போடுவதற்காக அங்குள்ள சுவிட்ச் பாக்ஸில் மின்சார வயரை செருகிய போது, எதிர்பாராத விதமாக திடீரென்று மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்தார். , உடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து, அவரது மனைவி அம்சவள்ளி (36), மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.