இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை மையத்தில் ஆய்வு செய்த சி விஜயபாஸ்கர்!
நிகழ்வுகள்
யோகா மற்றும் இயற்கை இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை மையத்தில் ஆய்வு செய்த விராலிமலை எம்எல்ஏ டாக்டர் சி விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள மதர் தெரசா யோகா & இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை அன்னவாசல் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்று வருகிறது இங்கு மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி, ஆஸ்துமா, தலைவலி, சர்க்கரை நோய் ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்யப்பட்டது மேலும் ஆலோசனை முகாமும் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மன டாக்டர் சி விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார் பின்னர் அதிமுக பொறுப்பாளர்கள் தங்களுக்குள்ள பிரச்சனைகளை குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்றனர் குறிப்பாக மூட்டு வலி ரத்த கொதிப்பு சர்க்கரைக்கு ஆலோசனை கேட்டனர் அதற்கு மருத்துவர்களும் சிறப்பான ஆலோசனை வழங்கினார்கள் பின்னர் தெரிவித்த முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் ஒவ்வொரு மனிதனுக்கும் உடல் முக்கியம் அவற்றை நாம் சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும் அதற்கு இது போன்ற முகாம்களில் நாமும் நமது நண்பர்களும் உறவினர்களையும் பங்கு கொள்ள செய்ய வேண்டும் அது நமது கடமையாகும் என தெரிவித்தார்.