தாராபுரம் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

தாராபுரம் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-09-01 15:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தாராபுரம் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நேற்று தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாராபுரம் திமுக ஒன்றிய செயலாளரும் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான எஸ்.வி. செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மாநகராட்சி 4 வது மண்டல குழு தலைவருன இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாராபுரம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பேசிய செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தமிழக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வருகிறது குறிப்பாக தமிழக அரசு அனைத்து பெண்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய மகளிருக்கு இலவச பேருந்து வழங்கப்பட்டுள்ளது அதேபோன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது இன்னும் சொல்லப்போனால் ஏராளமான திட்டங்களை வகுத்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் அதை முறியடிக்கும் வகையில் வருகின்ற தாராபுரம் சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டுமென கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன்,கொளத்துப்பாளையம் பேரூர் கழக திமுக செயலாளர் கே. கே. துரைசாமி, சின்னக்காம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் , தாராபுரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு,உட்பட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இந்நாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ,துணை அமைப்புகளின் நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக தாராபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார் நன்றி உரையாற்றினார்.

Similar News