கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த போலீசார்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் 01.09.2024 -ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவாச்சூர் பகுதியில் சிறப்பு ரோந்து மேற்கொண்ட பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராம்குமார் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் அய்யனாபுரம், நடுத்தெருவை சேர்ந்த அஜய் (22) என்பவரை விசாரணை செய்ததில் அவர் பள்ளியில் பயிலும் மாணவர்களான சிறார்களுகளிடம் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அஜய்யை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூபாய்.2500 மதிப்புள்ள 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் 5 மற்றும் ரூபாய் 500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.