திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் : அமைச்சர் பங்கேற்பு
தூத்துக்குடியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி பிரையன்ட் நகரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொணடு, கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து உரையாற்றினார். கூட்டத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ். ரமேஷ், வட்டச் செயலாளர்கள் சிங்கராஜ், சுப்பையா, செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரதீப், மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார், வைதேகி, வட்டச்செயலாளர் பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.