ஆடு வியாபாரி கொலை: கிராம மக்கள் சாலை மறியல்!
சாத்தான்குளம் அருகே ஆடு வியாபாரியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறையை சோ்ந்தவா் சுடலை (52). இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா் ஆடு வளா்ப்புத் தொழில் செய்து வந்தாா். ஆடுகளை பராமரிப்பதற்காக மணிகண்டன் என்பவரை வேலைக்கு வைத்திருந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள தேமாங்குளம் வயல்வெளியில் கிடை அமைத்து ஆடுகளை மணிகண்டன் பராமரித்து வந்தாா். இந்நிலையில் நேற்று காலை வெட்டுக் காயங்களுடன் சுடலை கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வாா்திருநகரி போலீசார் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்த நிலையில் கொலை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த சுடலையின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் – திருச்செந்தூர் பிரதான தேசிய சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் தலைமையிலான போலீசார் தகவல்அறிந்து சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார், திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த்குமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கிமுருகேஸ்வரி, காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன், உதவி ஆய்வாளர் . சுரேஷ்குமார்மற்றும்போலீசார், வருவாய்த்துறை சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குடும்பதினருக்கு மாவட்ட ஆ்ட்சியர் மூலம் அரசிடம் ஒப்புதல் பெற்று அரசு வேலை, மற்றும் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். மறியல் காரணமாக நாகர்கோவில், திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்கள், இதர வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. சுமார் 3மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.