கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கே.எஸ்.ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. கே.எஸ் .ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் துணை முதல்வர் ஜி. கார்த்திகேயன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். முதல்வர் ஆர். கோபாலகிருஷ்ணன் கல்லூரியைப் பற்றிய விவரங்களையும் சாதனைகளையும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு விரித்துரைத்தார். மேலும் கல்லூரியின் பல்வேறு ஆளுமைகளையும்,துறைத்தலைவர்களையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். எம் .வெள்ளைப்பாண்டி ,மின் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தரநிலைக்கோப்புரவு சோதனை மற்றும் தரச்சான்றிதழ் இயக்குனரகம், பொது இயக்குனர், டெல்லி அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தையும் தனது அனுபவங்களையும் மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் போட்டித் தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வினையும் மாணவர்களிடையே ஏற்படுத்தினார். பல்வேறு கல்விச் சலுகை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நூலகம் மற்றும் மாணவர் நலன் இயக்குனரான ஏ.எம்.வெங்கடாசலம் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்வி நிறுவன இயக்குனர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, டீன்கள், கல்லூரி இயக்குனர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் 950 பேர் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.