பொன்னமராவதி தாலுகாவில் உள்ள மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று வழங்கினார். பின்பு பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இதில் ஆலவயல் நகரப்பட்டி, பொன்னமராவதி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.