தீயணைப்பு துறை சார்பில் போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம்

பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை போலி ஒத்திகை பயிற்சி

Update: 2024-09-02 13:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை போலி ஒத்திகை பயிற்சி மற்றும் செயல் விளக்கம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அயன் பேரையூர் வ.களத்தூர் திருவாலந்துறை ஆகிய கிராமங்களில் இன்று நடைபெற்றது. இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நீர் நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்புத்துறை படகு மூலமும் சிறப்பு தளவாடங்கள் மூலமும் எவ்வாறு உயிருடன் மீட்பது போன்ற பயிற்சியையும் பருவ மழை காலங்கள் மற்றும் இடி மழை மின்னல்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் இன்ப ராசன் தீயணைப்பாளர்கள் மாதேஷ் பால்ராஜ் சரண்சிங் ஸ்ரீதர் பிரவீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர்.

Similar News