பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம்

Update: 2024-09-03 01:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தலைமையாசிரியர் செ.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி 24 பேர் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்களிலிருந்து தலைவர் வினிதா மற்றும் துணைத்தலைவர் வளர்மதி ஆகியோருடன் 14 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக வார்டு உறுப்பினர்கள் ராமன், சு.மார்த்தாள், கல்வியாளர் பிரிவில் வி.சி.முனியப்பன், சுய உதவிக்குழு உறுப்பினர் பிரிவில் சத்யா, முன்னாள் மாணவ உறுப்பினர்களாக கலைவாணி, பிரேமா, லட்சுமிநாராயணி, அசோக்குமார் ஆகிய 4 பேரும், ஒருங்கிணைப்பாளராக தலைமையாசிரியர் செ.தங்கவேல், ஆசிரியர் பிரதிநிதியாக சு.பிரபு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பற்றி ஆசிரியர் து.விஜய் விரிவாக எடுத்துரைத்தார். பார்வையாளர் செங்கோடம்பாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை மல்லிகா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 56 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் க.லட்சுமி, சு.பிரபு, து.விஜய், பொ.நித்யா ஆகியோருடன் இணைந்து பள்ளியின் சாரண இயக்க மாணவ மாணவியர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

Similar News