தூத்துக்குடி நகர் நல மையத்தில் மேயர் ஆய்வு!
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர் நல மையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாத்திமா நகர் நல மையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை வரும் நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதுணையுடன் நிறைவேற்றித் தருகிறேன் என்று தெரிவித்தார். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.