அரசு வழங்கிய பட்டா இடத்தை அளவீடு செய்து தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

அரசு வழங்கிய பட்டா இடத்தை அளவீடு செய்து தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

Update: 2024-09-03 03:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்ட புதியஅலை மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில், அளித்த மனு:விழுப்புரம் அடுத்த வீரமடை, காணை பெரிச்சானுார், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த 23 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, அரகண்டநல்லுார் பகுதியில் கடந்த 6 மாதத்திற்கு முன் வழங்கப்பட்டது.தற்போது, அந்த இடத்தில் வீடுகட்டி குடியேறுவதற்கு முயன்றால், பட்டா வழங்கிய அந்த இடத்தில் இதுவரை அளவீடு செய்யாமல் உள்ளனர்.தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., சர்வேயர் உள்ளிட்ட அலுவலர்களை நேரில் சந்தித்தும், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளந்து தருமாறு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், தற்போது தனி நபர் ஒருவர் அந்த இடத்தை அவருக்கு சொந்தம் என்று கூறிவருகிறார்.எனவே, மாற்றுத்திறனாளிகளை அலைகழிக்காமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, அங்கு வீடு கட்டுவதற்கு இடத்தினை அளவீடு செய்து தரவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News