வெள்ளியணை அருகே லாரியை டூ வீலர் முந்த முயன்றதால் டூவீலர் மீது லாரி மோதி விபத்து.
வெள்ளியணை அருகே லாரியை டூ வீலர் முந்த முயன்றதால் டூவீலர் மீது லாரி மோதி விபத்து.
வெள்ளியணை அருகே லாரியை டூ வீலர் முந்த முயன்றதால் டூவீலர் மீது லாரி மோதி விபத்து. கரூர் மாவட்டம், பிச்சம்பட்டி, குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 48. இவர் செப்டம்பர் 1-ம் தேதி இரவு 7 மணி அளவில், கரூர்- பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெள்ளியணை பகுதியில் செயல்படும் பாரதி பள்ளி அருகே சென்றபோது, திருச்சி மாவட்டம், முசிறி, கீழத் தெருவை சேர்ந்த முருகன் வயது 44 என்பவர் ஓட்டிச் சென்ற லாரியை ராமசாமி தனது டூவீலரில் முந்தி சென்றார். அப்போது லாரியை வேகமாக ஓட்டிய முருகன், ராமசாமியின் டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்த ராமசாமிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் மனைவி கோமதி வயது 37 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும்,சாலை விதிகளை மீறியும் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.