இலுப்பூர் அருகே உள்ள கலிங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (33). இவர், இலுப்பூர் மேலப்பட்டி பகுதியில் அரிவாளை வைத்துகொண்டு சாலையில் செல்லும் மக்களை மிரட்டி வந்துள்ளார். பின்னர், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் போலீசார், பொதுமக்களை மிரட்டிய ராஜாவை கைது செய்து அவரிடம் இருந்த அரிவாளை கைப்பற்றினர்.