கொத்தமங்கலம் பளுவன் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). விவசாயி. இவர் கடன் சுமையால் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்