ஆதரவற்றோர் இல்லத்திற்கு உதவிகளை செய்த திமுக நிர்வாகி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று ஆதரவற்றோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களை திமுக நிர்வாகி வழங்கினார்.

Update: 2024-12-26 10:23 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இயங்கி வரும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்திற்கு, இன்று (டிச.26) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் தங்கப்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் 2 மாதத்திற்கு தேவையான பலசரக்கு பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்தாக அளிக்கப்பட்டது, இதில் நகர செயலாளர் தங்கப்பாண்டியும் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமர்ந்து உணவு உட்கொண்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலமுடன் வாழ பிராத்தனை செய்தார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News