பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர்

பவானிசாகர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தனர்

Update: 2024-09-03 05:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நேற்று செப்டம்பர் 1 காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டா பிரிவில் பவானிசாகர் அரசு தொடக்கப் பள்ளியின் சார்பாக இரண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டா பிரிவில் நமது பள்ளியின் சார்பாக கலந்து கொண்ட நான்காம் வகுப்பு மாணவன் எல். ஜேம்ஸ் மில்லர் முதலிடமும். ஐந்தாம் வகுப்பு மாணவி ரா .மித்ரா இரண்டாம் இடமும் பெற்றனர். இதை பாராட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏ தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்கு கோப்பைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த கராத்தே தலைமை பயிற்சியாளர் ஏ .ஆர். சக்திவேல் மாஸ்டர் அவர்களுக்கும், அவர்களது தலைமையில் கராத்தே பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர் சரத் என்கிற லோகநாதன் அவர்களுக்கும் பவானிசாகர் அரசு தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பெற்றோர்கள் ,மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவி த்தனர்.

Similar News