ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு உள்ளதா என நகர மன்ற தலைவர் திடீர் ஆய்வு
ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு உள்ளதா என நகர மன்ற தலைவர் திடீர் ஆய்வு
ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு கிடைப்பதில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து ரேஷன் கடைகளில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார். வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கடந்த மாதம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வாங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம் என செய்தியாளர்களிடம் நகர மன்ற தலைவர் தெரிவித்தார் மேலும் அனைத்து கடைகளிலும், ஐந்தாம் தேதி வரை பாமாயில் பருப்பு வழங்கப்படும் என அறிவிப்பு பலகை எழுதி வைக்கும்படி கடை பணியாளர்களை கேட்டுக் கொண்டர் இதுகுறித்து பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் குறுஞ்செய்திகள் மூலம் தகவல் அனுப்பி பொருள்களை பெற்றுக் கொள்ள ரேஷன் கடை பணியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது கூட்டுறவுத் துறை அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்