பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் மனைவி கல்யாணி (40) இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது ஸ்கூட்டியில் டுவிபுரம் ரோட்டில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த ஒரு வாலிபர் கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார். இதையறிந்த கல்யாணி அவனை காலால் எட்டி உதைத்ததில், அந்த வாலிபர் நிலை தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டு பைக்கில் வேகமாக தப்பிச்சென்றுவிட்டார். இதனால் கல்யாணியின் நகை தப்பியது. இது குறித்து அவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து, நகை பறிக்க முயன்ற வாலிபரை தேடி வருகிறார்.